இந்தியா முழுவதும் வகைவகையாக அலங்கார மீன்கள் சென்னை கொளத்தூரிலிருந்து தான் விற்பனை செய்யப்படுகின்றன. சாதாரண அலங்கார மீன்களிலிந்து டிஸ்கஸ், பிளவர் பார்ன், அரவாணா போன்ற மிக விலை உயர்ந்த மீன்கள் வரை இங்கு மொத்தமாகவும் சில்லரை விலையிலும் கிடைக்கும். அலங்கார மீன்களின் மையமாக, தாயகமாக கொளத்தூரை கூறினால் தவறேதுமில்லை. இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்களின் தொழில் அலங்கார மீன்களை வளர்ப்பதும் இனப்பெருக்கம் செய்வதும் தான் . ஏறக்குறைய பெரும்பாலான வீடுகளின் பின்புறம் சிமெண்ட் தொட்டிகளில் வகை வகையான அலங்கார மீன்கள் இருக்கும். கொளத்தூர் ரெட்டை ஏரி சிக்னல் அருகே உள்ள பள்ளிக்கூட வீதி (மேற்கு மாட வீதி ) முதல் தெற்கு மாட வீதி கிழக்கு மாட வீதி வரை இந்த கடைகள் பரவி கிடக்கின்றன. உள்புற வீதிகளிலும் பல கடைகள் உள்ளன. பள்ளிக்கூட வீதி ஆரம்பிப்பதே தெரு ஓர விற்பனையாளர்களிலிருந்து ஆரம்பிக்கிறது
இவர் இங்கே விற்பனை செய்வது டுபிபிஎஸ் (tubifex ) புழுக்கள் மற்றும் arawara, flowerhorn போன்ற மீன்களுக்கு உணவாக போடப்படும் ஏரிகளில் குட்டைகளில் பிடிக்கப்படட சிறிய மீன்கள்
இவை வளர்ப்பு மீன்கள் மற்றும் aquarium சம்மந்தப்பட் ட அனைத்து பொருட்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் கடைகளில் சில.
. இந்த கடையில் சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை flowehorn மீன்கள் விற்பனை செய்யப்படுகின் றன .
fighter மீன்களுக்கு என்று தனி கடைகளில் ஒன்று
உப்பு நீர் (கடல் ) அலங்காரமீன்களுக்கு என்று தனி கடைகள் உள்ளன
அலங்கார மீன்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு உண்டான மருந்துகளுக்கு என்று தனி கடை தெற்கு மாட வீதியில் .
டிஸ்கஸ், போன்ற விலையுயர்ந்த மீன்கள் மற்றும் பல அரிய வகை மீன்கள் தாய்லாந்து, சிங்கப்பூர் , மலேஷியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகின்றன .
இந்த கடையிலும் வளர்ப்பு மீன்கள் சம்மந்தப்பட்ட அனைத்து பொருட்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் தரமான நியாமான விலையில் கிடைக்கும்
இங்கும் வளர்ப்பு மீன்கள் சம்மந்தப்பட்ட அனைத்து பொருட்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் தரமான நியாமான விலையில் கிடைக்கும், ஆனால் கடை ஆட்கள் உங்களை கண்டுகொள்ளவே மாட் டார்கள் , நீங்கள் கேட்கும் கேள்விக்களுக்கு பதில் கிடைக்காது .
அரவானா மீன்களுக்குகென்று தனி கடைகளும் உண்டு . காலை 9 மணிக்கு துவங்கி அருகில் உள்ள
ரெட்டைஏரி, விநாயகபுரம், லட் சுமிபுரம் , redhills போன்ற ஊர்களிலிருந்து இரண்டு சக்கர வாகனங்கள் மூலம் பெரிய பைகளின் 1000க் கணக்கான மீன்கள் வந்து கொண்டிருக்கும். அவைகள் பிரிக்கப்பட்டு பக்கத்தில் உள்ள ஊர்களில் உள்ள lfs (local fish store ) எனப்படும் அலங்கார மீன் கடைகளுக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். இதற்கென தனி கடைகள் உள்ளன.இங்கு அவர்கள் மீன்களை கையாளும் விதத்தை பார்த்தால் hobbyist ஆக மிகவும் வருத்தப்படுவீர்கள். அவர்களின் முரட்டுத்தனமான கையாளுதலால் நிறைய மீன்கள் இறந்துவிடும் ..

நீங்கள் அலங்கார மீன்களை பொழுதுபோக்குக்காக வளர்ப்பராக இருந்தால் கண்டிப்பாக ஒரு முறை வந்து பாருங்களேன். பெரம்பூரிலிருந்து நிறைய மாநகர பேருந்துகள் கொளத்தூர் வழியாக செல்லுகின்றன
Nice Post.Planning to visit these shops with kids soon.
ReplyDeleteKids will enjoy. There are a lot of pet birds shops also
ReplyDelete